நோய்களை விரட்டும் ‘கருப்பு இஞ்சி’: உடலை மீண்டும் புதுப்பிக்கும் அதிசய ராஜ மூலிகை!


இயற்கை நமக்கு அளித்த அரிய வகை அற்புதக் கொடைகளில் மிக முக்கியமான ஒன்று கருப்பு இஞ்சி. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த அரிய ராஜ மூலிகை, இன்றைக்கு நவீன மனிதனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும். எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல், கடுமையான பத்தியங்கள் எதுவும் இல்லாமல், உடலை அடியோடு தூய்மைப்படுத்தி நோய்களை விரட்டும் வல்லமை இதற்கு உண்டு. உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து, மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கும் இந்த அற்புத மூலிகையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உடலில் உள்ள கழிவுகளை அடியோடு நீக்கும் இயற்கை கவசம்

நமது உடலுக்குள் சேரும் நச்சுகளும் கழிவுகளுமே அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணமாக அமைகின்றன. கருப்பு இஞ்சி சப்ளிமென்ட்டை நாம் பயன்படுத்தும்போது, அது முதலில் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. குறிப்பாக நெஞ்சில் தேங்கியிருக்கும் தீராத சளி, ரத்தக் குழாய்களில் ஏற்படும் ஆபத்தான அடைப்புகள், கால்களில் ஏற்படும் வெரிகோஸ் வெயின் நரம்புப் பிரச்சனைகள் ஆகியவற்றை மிகக் குறுகிய காலத்தில் சரிசெய்கிறது. இதுமட்டுமன்றி, உடலில் ஆங்காங்கே தோன்றும் கொழுப்பு கட்டிகள், பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீர்க்கட்டிகள் மற்றும் அதிகப்படியான உடல் பருமன் ஆகியவற்றை கரைத்து உடலைச் சீரான வடிவத்திற்கு கொண்டு வருகிறது.

உள்ளுறுப்புகளைச் சீரமைத்து புத்துயிர் அளிக்கும் அற்புதம்

நமது உடலின் இயக்கம் அனைத்தும் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. கருப்பு இஞ்சி நமது செரிமான மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம் மற்றும் ரத்த ஓட்ட மண்டலத்தை சீராக இயங்க வைப்பதுடன், தோல் பகுதியில் உள்ள நச்சுகளையும் அகற்றி உடலுக்குத் தேவையான முழு பாதுகாப்பை வழங்குகிறது. இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், பித்தப்பை மற்றும் இரைப்பை போன்ற மிக முக்கியமான உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, அவற்றை ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது.

செல்களை ரீசார்ஜ் செய்து நோய்களைத் தானாகவே குணமாக்கும் சக்தி

கருப்பு இஞ்சியின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே, நமது உடலில் உள்ள ‘மைட்டோகாண்ட்ரியா’ என்ற ஆற்றல் செல்களைத் தூண்டி ரீசார்ஜ் செய்வதுதான். இதனால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் உடனடியாகப் புத்துணர்ச்சி பெறத் தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட செல்கள் அழிந்து, புதிய செல்கள் மீண்டும் உருவாகும் இயற்கை நிகழ்வு உடலுக்குள் வேகமாக நடக்கிறது. இதன் காரணமாக, உடல் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்கிறது., எந்தவித நோயாக இருந்தாலும் அதைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் அற்புத ஆற்றலைப் பெறுகிறது.

கழிவுகளை அகற்றுதல், நோயின் தீவிரத்தைக் குறைத்தல், உறுப்புகளுக்குப் புத்துணர்ச்சி தருதல் மற்றும் செல்களை மீண்டும் உருவாக்குதல் ஆகிய நான்கு நிலைகளில் செயல்பட்டு உடலுக்குப் புது வாழ்வு தரும் இந்த கருப்பு இஞ்சியை தினமும் பயன்படுத்தி வந்தால், நோய்களின் பயமின்றி ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ முடியும் என்பது நிச்சயம்!

டாக்டர். எஸ். சிவமாதன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்